தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு 2015 -2017-ம் ஆண்டுகளுக்கான புதிய தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தேர்தல் அதிகாரியாக இருந்து இந்த தேர்தலை நடத்தினார்.
தயாரிப்பாளார் சங்கத் தலைவர் தலைவர் பதவிக்கு கலைப்புலி எஸ்.தாணு, ஏ.எல்.அழகப்பன், மன்சூர் அலிகான் ஆகியோர் போட்டியிட்டதில் 400க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் ‘கலைப்புலி’ எஸ். தாணு வெற்றி பெற்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஆகியிருக்கிறார்.
செயலாளர்களாக டி.சிவா, ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகிய இருவர் மட்டுமே போட்டியிட்டதால் அவர்கள் இருவருமே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தியாகராஜன் பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.