பொல்லாதவனில் கோட்டைவிட்ட வாய்ப்பை இப்போது பாலாஜி மோகன் இயக்கும் ‘மாரி’ மூலம் கெட்டியாக பிடித்துக்கொண்டு தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் காஜல் அகர்வால். இவர் இதுவரை நடித்த படங்களிலேயே மிக குறைந்த வயதுள்ள இயக்குனர் பாலாஜி மோகன் தானாம். இந்தப்படத்தின் மூலம் காஜல் அகர்வாலுக்கு, அவர் பறவைகளைப்பற்றி கொண்டிருந்த சில தேவையில்லாத பயங்களும் நீங்கியிருக்கின்றன.
‘மாரி’ படத்தில் பறவைகளுடன் காஜல் நடிக்கவேண்டியிருந்தது. பொதுவாக பறவைகள் என்றாலே காஜலுக்கு சற்றே பயம் தான்… ஆனால் அவற்றுடன் நேரில் பழகியபோது, தான் பயந்தது தேவையில்லாதது என உணர்ந்துகொண்டாராம் காஜல். அதுமட்டுமல்ல, ஆசையுடன் புறாக்களை தனது கையிலெடுத்து கொஞ்சும் அளவுக்கு முன்னேறிவிட்டராம்.. இதற்கு ‘மாரி’ டீமுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும் என்கிறார் காஜல்