பாலாஜி மோகன், கார்த்திக் சுப்பாராஜ், நலன் குமாரசாமிபோன்ற இயக்குனர்களின் வரிசையில் துவாரக் ராஜா என்பவரும் குறும்படங்களில் இருந்து ‘காதல் கசக்குதய்யா’ படம் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமாகிறார். திலகர் படத்தில் கதாநாயகனாக நடித்த துருவா கதாநாயகனாக நடிக்கிறார்..
கற்றது தமிழ் படத்தில் அஞ்சலியின் கதாபாத்திரத்திற்கு குழந்தை நட்சத்திரமாக நடித்த வெண்பா இந்தப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ‘அதே கண்கள்’ மற்றும் ‘சேதுபதி’ படத்தில் நடித்த லிங்கா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இந்தப்படத்தில் முழுக்கதையையும் விஷுவலாக மட்டும் இல்லாமல் வசனங்களின் வழியாகவே முழுப்படமும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். பொதுவாக காதலின் பெயரால் பெண்களை திட்டி கொண்டிருக்கும் காலக்கட்டத்தில், காதலை குறித்து பெண்களின் நிலைப்பாடு என்ன என்பதை உணர்ச்சிப்பூர்வமாகவும் சித்தரிக்கிறது.
‘போடா போடி’, ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்திற்கு இசையமைத்த தரண் இசையமைத்திருக்கிறார். இந்தபபடம் வருகின்ற செப்டம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது. சமீபத்தில் விஜய்சேதுபதி இந்த படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டார்
Attachments area