பேய்க்கும் விளக்கமாறுக்கும் என்ன சம்பந்தம் : கபிலன் வைரமுத்து விளக்கம்..!

‘பேய்கள் ஜாக்கிரதை’ என்கிற டைட்டிலிலும் ஒரு படம் இப்போது உருவாகி வருகிறது இந்தப்படத்தின் இயக்குநர் கண்மணி, கபிலன் வைரமுத்துவிடம் புரோமோ சாங் ஒண்ணு கொடுங்களேன் என கேட்க உடனே, “பயமுறுத்தும் பழங்கதைகள் புடிச்சிருக்கு நோக்கு, பகுத்தறிவு புகட்டுகிற நோக்கமில்லை நேக்கு” என தொடங்கும் பாடலை எழுதியதுடன் அதில் “வேப்பமரம் சாஞ்சாலும் வெளக்கமாரு ஜெயிச்சாலும் பேய்கள் ஜாக்கிரதை” என்ற வரியையும் எழுதியுள்ளார்..

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற ஆம் ஆத்மி கட்சியின் சின்னமான துடைப்பம் (வெளக்கமாரு) இந்தப்பாடலில் இடம்பெற்றுள்ளதே என கபிலன் வைரமுத்துவிடம் கேட்டால், “பேய்களை வெளக்கமாரு கொண்டு ஓட்டினாலும் அவை மறுபடியும் வரலாம் என்று படத்திற்கு பயன்படும் ஃபேண்டஸி அர்த்தத்தில்தான் நான் எழுதியிருக்கிறேன். இதைப் பாடலாக எடுத்துக்கொள்வதும் அரசியலாக கருதுவதும் அவரவர் பார்வையைப் பொருத்தது” என்று பதில் சொல்கிறார்..

அறிமுக இசையமைப்பாளர் மரிய ஜெரால்டு இசையமைத்திருக்கும் இந்தப்படத்தின் பாடல்கள் நேற்று வெளியாகியிருக்கின்றன.

கண்மணிகபிலன் வைரமுத்துபேய்கள் ஜாக்கிரதைமரிய ஜெரால்டு