பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘கபாலி’.. கலைபுலி தாணு இந்தப்படத்தை தயாரித்துள்ளார். அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த கபாலி படத்தின் டீசர் இன்று காலை 11 மணி அளவில் யூ டியூப்பில் வெளியானது. ஒரு ரஜினி ரசிகன் எதிர்பார்க்கும் சகல அம்சங்களுடனும் வெளியாகியுள்ள இந்த டீசர் ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாகவே உள்ளது.. ரஜினியின் ஆக்சன், பஞ்ச் என எதற்கும் குறைவில்லை..
அதிலும் டீசரின் முடிவில் சில நொடிகளில் எண்பதுகளில் இருந்த தனது தோற்றத்தில் ரஜினி வந்து செல்லும் காட்சி… சான்ஸே இல்லை.. எத்தனை வயதானாலும் ரஜினி ஒருவருக்கு மட்டுமே மேக்கப் போட்டால் அவரது பழைய முகம் திரும்ப கிடைக்கிறது என்பது இந்த டீசரின் மூலம் மீண்டும் உறுதியாகியுள்ளது.