தங்களது அபிமான நடிகர்கள் நடித்த படங்களின் டீஸர்களோ அல்லது ட்ரெய்லர்களோ வெளியாகி 50 லட்சம் ஹிட்ஸை தாண்டிவிட்டாலே விழா கொண்டாடும் விஜய் ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் சூப்பர்ஸ்டாரின் ‘கபாலி’ டீசரை யூடியூப்பில் பார்வையிட்ட பார்வையாளர்களின் எண்ணிக்கையை பார்த்து மிரண்டுபோய்க் கிடக்கிறார்கள்.
வெளியான மூன்றே நாளில் ஒரு கோடி பார்வையாளர்களை தாண்டுவது என்றால், பாட்ஷா பாணியில் சொல்வதென்றால் ‘நாடி நரம்பு ரத்தம், சதை, புத்தி’ என ரசிகர்களின் எல்லாமாகவும் மாறியிருக்கும் ரசிகர்களின் மனதில் ஊறியிருக்கும் சூப்பர்ஸ்டார் ஒருவாரால் மட்டுமே இந்த சாதனைகள் சாத்தியம் என்பதையும் இனிமேல் தாங்கள் கொஞ்சம் அடக்கியே வாசிக்கவேண்டும் என்பதையும் இந்த டீசரின் மூலம் மாற நடிகர்களின் ரசிகர்கள் நன்றாகவே உணர்ந்திருப்பார்கள்.