ரஜினியின் ‘கபாலி’க்கு சிக்கல் ஏதுமில்லை..!

ஒருவரின் இழப்புதான் இன்னொருவரின் லாபம் என்று பழமொழி சொல்வார்கள் தெரியும் தானே.. அது ரஜினி விஷயத்தில் வேறுவிதமாக பலித்திருக்கிறது. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்துக்கு ‘கபாலி’ என டைட்டில் வைத்துள்ளதாக இயக்குனர் ரஞ்சித் டிவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் இந்தப்பெயரில் ஏற்கனவே ஒரு படம் டைட்டில் வைக்கப்பட்டு சில நாட்கள் ஷூட்டிங் முடித்து, ஆடியோ ரிலீஸ் கூட பண்ணிவிட்டனர். ஆனால் படத்தின் டைட்டிலை அது ரிலீஸாகும் வரை வருடாவருடம் பணம் கட்டி புதுப்பித்தால் தான் டைட்டில் அவர்களுக்கு சொந்தமாகும்.. ஆனால் அந்த ‘கபாலி’ பட இயக்குனரும் தயாரிப்பாளரும் டைட்டிலை புதுப்பிக்க தவறிவிட்டனர்.

ரஜினி படத்திற்கு ‘கபாலி’ என டைட்டில் வைக்கலாம் என பதிவு செய்ய சென்றபோது, அது புதுப்பிக்கப்படாமல் இருந்த காரணத்தால் ரஞ்சித் அன் கோவிற்கு எளிதாக கிடைத்துவிட்டது. அதனால் ரஜினி பட டைட்டிலுக்கு இனி சிக்கல் எழ வாய்ப்பு இல்லை.

பொதுவாக, இதுவரை நாம் பார்த்த சினிமாக்களில் ஏதாவது ஒரு ஏரியாவின் லோக்கல் ரவுடியாக இருப்பவனுக்குதான் ‘கபாலி’ என பெயர் வைப்பது வழக்கம். ஆனால் இப்போது ரஜினி படத்துக்கு ‘கபாலி’ என்கிற பெயரா என்கிற ஆச்சர்யம் தான் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.. ஆனால் போகப்போக இந்தப்பெயர் நமக்கு பழகி, ட்ரெண்டிங்கில் வந்து நிற்கும் பாருங்களேன்.

கபாலிரஜினிரஞ்சித்