சென்னையில் சூப்பர்ஸ்டாரின் கபாலி படப்பிடிப்பில் பரபரப்பாக இருக்கிறார் இயக்குனர் ரஞ்சித். அட்டகத்தி படத்தின்போது ஆறரை மணிக்கு ஸ்பாட்டுக்கு சென்று ஏழு மணிக்கு முதல் ஷாட் வைக்கும் அதே பழக்கம் தான், இன்று கபாலியிலும் தொடர்கிறது.. இவர் இப்படியென்றால் சூப்பர்ஸ்டார் ரஜினி தினசரி ஸ்பாட்டுக்கு தவறாமல் ஆஜராகிவிடுகிறாராம். தனது ஷாட் முடிந்துவிட்டாலும் கூட, மீதி நேரமும் கூடவே இருக்கிறாராம்..
ரஜினியின் படங்களில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பது அவரது பஞ்ச் டயலாக்குகளைத்தான்.. ஆனால் இந்த கபாலி பஞ்ச் எதுவும் பேசமாட்டார் என்கிறார் இயக்குனர் ரஞ்சித். காரணம் ஸ்க்ரிப்ட் பஞ்ச் எதையும் கேட்க வில்லையாம்.. ஒரு கையை இழந்த பின்னரும் தனது வீரமும் தன்மானமும் ரோஷமும் குறையாத ‘முள்ளும் மலரும்’ காளியின் இன்னொரு வெர்ஷன் தான் இந்த ‘கபாலி’யாம்.