வில்லன் நடிகரை நண்பராக்கிய ரஜினி..!

பல படங்களில் வில்லனாகவும் வில்லனுக்கு வலதுகையாகவும் அராஜக போலீஸ் அதிகாரியாகவும் ரசிகர்களுக்கு நன்றாக பரிச்சயமானவர்தான் நடிகர் சம்பத் ராம். இதுநாள் வரை சுமார் 200 படங்களில் நடித்துள்ள சம்பத் ராமுக்கு இத்தனை படங்கள் தராத சந்தோஷத்தை கொடுத்துள்ளது சூப்பர்ஸ்டாரின் ‘கபாலி’..

ஆம்.. கபாலி’ படத்தில் நடித்துள்ளார் என்பதைவிட ரஜினியின் நண்பராக நடித்திருக்கிறார் என்பதுதான் இவரது அளவுகடந்த சந்தோஷத்துக்கு காரணம்.. ரஞ்சித்தின் இயக்கத்தில் வெளியான ‘மெட்ராஸ்’ படத்திலேயே தனக்கு ஒரு சின்ன கேரக்டர் கூட தராமல் போய்விட்டீர்களே என அந்த சமயத்தில் இயக்குனர் ரஞ்சித்திடம் பேச்சுவாக்கில் சொன்னாராம் சம்பத்.. அதை மறக்காமல் ஞாபகம் வைத்து ‘கபாலி’யில் டபுள் ஜாக்பாட்டாக தந்துவிட்டார் ரஞ்சித்.

இது ஒரு சந்தோஷம் என்றால் ஷூட்டிங் ஸ்பாட்டில் சம்பத்திடம் மிகவும் நட்பாகவும் அன்பாகவும் பழகிய ரஜினி, சம்பத்தின் கட்டுக்கோப்பான உடல் பற்றிய பிட்னெஸ் ரகசியங்களையும் கேட்டறிந்தாராம். அதுமட்டுமல்ல, “படப்பிடிப்பு முடிந்தாலும் நாம் நண்பர்கள் தான்.. நேரம் கிடைக்கும்போது வீட்டுப்பக்கம் வாங்க” என்றும் ரஜினி சொல்ல சந்தோஷத்தில் திக்குமுக்காடி போய்விட்டாராம் சம்பத்.

KabaliRajiniSampathரஜினி