‘கபாலி’யின் யின் ‘மகிழ்ச்சி’ உருவானது எப்படி..?


ரஜினியின் கபாலி’ படத்தின் டீசர் வெளியானபோதே, அதனுடன் சேர்ந்து ஹிட்டான வார்த்தைதான் ‘மகிழ்ச்சி’.. சாதாரண ஒரு வார்த்தை தான்.. ஆனால் ரஜினி பேசியதாலேயே வைரல் ஆனது.. இந்த மகிழ்ச்சியை அந்த இடத்தில் பயன்படுத்தும் ஐடியா இயக்குனர் ரஞ்சித்துக்கு எப்படி வந்ததாம் என்றால் அந்தக்கதையும் சுவாரஸ்யமாகவே இருக்கிறது.

‘கபாலி’ படத்துக்கு முன்னாடி ‘மெட்ராஸ்’ பட செட்டிலயே ’மகிழ்ச்சி’ என்கிற வார்த்தை ரொம்பவே ஃபேமஸ். காரணம் ரஞ்சித்தின் உதவி இயக்குனர் அதியன் என்பவர்தான் இந்த வார்த்தையை அடிக்கடி சொல்வாராம். அவரிடம் இருந்து. அப்படியே ரஞ்சித்தும் ஒவ்வொரு நல்ல ஷாட் முடிந்தாலோ அல்லது நல்ல விஷயம் நடந்தாலோ உடனே ‘மகிழ்ச்சி’ என சொல்ல ஆரம்பித்தாராம்.

‘கபாலி’ பட செட்டிலேயும் இந்த ’மகிழ்ச்சி’ தொடரவே, ரஜினி இதுபற்றி ஆர்வமுடன் விசாரித்தாராம். விஷயத்தை சொன்னதும் அவருக்கும் இந்த வார்த்தை தொற்றிக்கொண்டு விடவே, அப்படியே டீசரில் பஞ்ச் வார்த்தையாக இணைத்துவிட்டாராம் இயக்குனர் ரஞ்சித்..

KabaliMagizhchiRajiniRanjithகபாலிமகிழ்ச்சிரஜினி