அமெரிக்காவில் ‘கபாலி’யின் அதிரடி பிசினஸ் ; தாணுவின் தைரிய அறிவிப்பு..!

பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘கபாலி’ படத்தை மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறார் கலைப்புலி எஸ்.தாணு. இதுவரை ரஜினி படங்கள் பண்ணிய பிஸினஸ் சாதனையை இந்தப்படம் முறியடிக்கும் என சொல்லப்பட்டு வந்த நிலையில் அது உண்மைதான் என தைரியமாக அறிவித்துள்ளார் கலைப்புலி தாணு.

நேற்று ரஜினி ரசிகர்களின் சார்பில் ‘மலரட்டும் மனித நேயம்’ என்கிற பெயரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று வேலூர் மாவட்டம் சோளிங்கரில் நடைபெற்றது.. இதில் கலந்துகொண்டு பேசிய தாணுவின் பேச்சு ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இருந்தது.. மேலும் ‘கபாலி’ படத்தின் மிரட்டலான செய்தி ஒன்றையும் பகிரங்கமாக தெரிவித்தார் தாணு.

1980ல் ரஜினி நடித்த ‘பைரவி’ படத்தை வெளியிட்ட போது ‘சூப்பர்ஸ்டார்’ என்று பட்டம் போட்டு விளம்பரம் செய்தேன். எனக்குத் தோன்றியதால் ‘சூப்பர்ஸ்டார்’ என்று போட்டேன். இப்போது ‘கபாலி’ படம் தயாரித்து வருகிறேன். எந்தப் படமும் இல்லாத சாதனையாக அமெரிக்காவில் மட்டும் ‘கபாலி’ படம் எட்டரை கோடி ரூபாய் வியாபாரமாகியிருக்கிறது. வருமான வரி சோதனை வந்தாலும் பரவாயில்லை இதுதான் உண்மை. யாருக்குமே இதுவரை வியாபாரம் இரண்டரைகோடி ரூபாயைத் தாண்டவில்லை.

சென்னை மழை வெள்ளத்தின் போது, தன் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஆயிரக்கணக்கான துப்புரவுத் தொழிலாளர்களுக்குத் தங்க இடம், உண்ண உணவு அளித்து மனித நேயம் காட்டியவர் ரஜினி. இது போல மனிதநேய நிகழ்ச்சிகள் நிறைய உண்டு. இந்த மனிதநேய விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்கிறேன்” என்று நெக்குருகி பேசினார் தாணு..

KabaliKalaipuli S DhanuMalarattum Manitha NeyamRajiniRanjithThanshika