பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்துள்ள ‘கபாலி’ படத்தின் மீதமுள்ள காட்சிகள் எனப்படும் ‘பேட்ச் ஒர்க்’ வேலைகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டன. டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.. இன்றுமுதல் தனது போர்ஷனுக்கு டப்பிங் பேச ஆரம்பித்துள்ளார் ரஜினி..
படத்தை எப்படியும் மேமாத வெளியீடாக கொண்டுவந்து விடவேண்டும் என முனைப்புடன் பணிகளை கவனித்து வருகிறார்கள் இயக்குனர் ரஞ்சித்தும், தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவும். இயக்குனர் மற்றும் உடன் நடித்துள்ள நட்சத்திரங்கள் என ரஜினி படங்களிலேயே இது ஒரு வித்தியாசமான கூட்டணியில் புதிய பாணியில் உருவாகிவரும் படம் என்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கவே செய்துவருகிறது.