சமீபத்தில் நடைபெற்ற கேன்ஸ் பட திரைபட திருவிழாவில் ‘கபாலி’ படத்தின் டீசர் நிகழ்த்திய மாயாஜாலம் தான் இப்போது ஹாட் ஆப் த டாபிக். இந்த விழாவில் இந்தியன் பெவிலியன் பிரிவில் திரையிடப்பட்ட படங்களை தொடர்ந்து, அடுத்ததாக வரவிருக்கும் படங்களின் ட்ரெய்லர் மற்றும் டீசர்களை திரையிட்டுள்ளார்கள். சில படங்களின் டீசர் திரையிட்டு முடிந்த நிலையில், அடுத்து ரஜினியின் ‘கபாலி’ டீசர் திரையில் ‘[நெருப்புடா’ என தெறிக்க ஆரம்பித்திருக்கிறது.. அவ்வளவுதான் அங்கிருந்தவர்களின் ஆரவாரத்தால் அரங்கமே அதிர்ந்ததாம்.
அங்கிருந்த அனைவரும் எழுந்து கைதட்டி இருக்கிறார்கள்.. இதைப்பார்த்து மிரண்டுபோன இத்தாலி நாட்டு சினிமாக்காரர், யார் இந்த ஹீரோ, இது எந்த மொழிப்படம், எனது நாட்டில் இந்தப்படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என நம் ஆட்களை தேட ஆரம்பித்துவிட்டாராம்.
பிரான்ஸில் நடைபெற்ற இந்த விழாவுக்கு சென்றிருந்த ஆனந்தா பிக்சர்ஸ் எல்.சுரேஷ் தான் அவருக்கு தாணுவின் அலைபேசி எண்ணையும், படத்தின் ஓவர்சீஸ் உரிமையை வாங்கியுள்ள சஞ்சய் வாத்வாவின் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து தொடர்புகொள்ள சொல்லிவிட்டு வந்தாராம்.
இத்தனை வருடமாக இந்த கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு சென்றுவந்த ஆனந்தா பிக்சர்ஸ் சுரேஷுக்கு இது புது அனுபவமாக இருந்திருக்கிறது. பிரான்ஸில் ‘கபாலி’ டீசருக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து ஆனந்த அதிர்ச்சியால் மிரண்டு போய் ஊருக்கு திரும்பிய சுரேஷ், பார்ப்பவர்களிடம் எல்லாம் இதை சிலாகித்து சொல்லி வருகிறாராம்.
# மகிழ்ச்சி #