‘கபாலி’ டப்பிங் பேச சென்னை வந்த தைவான் வில்லன்..!

பா.ரஞ்சித் டைரக்சனில் ரஜினி நடித்துள்ள ‘கபாலி’ படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.. படத்தை ஜூலையில் வெளியிட முடிவு செய்துள்ளாராம் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு. சில வாரங்களுக்கு முன்பு தான் இந்தப்படத்திற்கான தனது டப்பிங்கை பேசி முடித்தார் ரஜினி. அதன்பிறகு தான் டீசரே வெளியானது.

இந்தப்படத்தின் முக்கால்வாசி காட்சிகள் மலேசியா மற்றும் இன்னும் சில நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளதால் நிறைய வெளிநாட்டு நடிகர்களும் இதில் நடித்துள்ளார்கள். அந்த வகையில் படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்திருக்கும் தைவானிஷ் நடிகரான வின்ஸ்டன் ஸாவோ, தற்போது கபாலி படத்தில் தனது போர்ஷனுக்கு டப்பிங் பேசுவதற்காக சென்னை வந்துள்ளார்.

KabaliKalaipuli S DhanuRajiniRanjithSanthosh Narayanan