வரும் ஜூலை-22ஆம் தேதி கபாலி படம் வெளியாக இருக்கிறது. இதற்காக கபாலி படத்திற்கான புரமோஷன்களில் புதுமையாக என்னென்ன விஷயங்களை செய்யமுடியும் அத்தனையையும் செய்து வருகிறார் படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி தாணு. அதற்காக பல நிறுவனங்களுடன் விளம்பர கூட்டணி அமைத்திருக்கிறார். அந்த நிறுவனங்கள் கபாலி படத்தை தங்களது தொழில் சார்ந்து விளம்பரப்படுத்துகின்றன.
அப்படித்தான் ஏர் ஆசியா நிறுவனம் கபாலி படத்திற்காக ‘கபாலி’ ரஜினி புகைப்படங்களை தங்களது விமானத்தில் வரைந்து ‘கபாலி’ விமானங்களாக உலகெங்கும் வளம் வர செய்திருக்கிறது.. அதேபோல ‘கபாலி’யுடன் பார்ட்னராக இணைந்திருக்கும் முத்தூட் நிறுவனம் தங்களது விளம்பர யுக்தியாக ‘கபாலி’ ரஜினி படம் பொறித்த தங்கம், வெள்ளி நாணயங்களை வெளியிட்டுள்ளது..