வெயில்,அங்காடித்தெரு,அரவான் படங்களை தொடர்ந்து வசந்தபாலன் இயக்கியுள்ள புதிய படம் ‘காவியத்தலைவன்’. சித்தார்த், பிருத்விராஜ் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கும் இந்தப்பட்த்தில் வேதிகா கதாநாயகியாக நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியாக இந்தி நடிகை அனைக்கா சோட்டி காவியத்தலைவன் திரைப்படத்தில் நடிக்கிறார்.
இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னால், தமிழ்நாட்டில் பெரும் செல்வாக்கோடு வாழ்ந்த நாடகக் கலைஞர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் சுதந்திரப் போராட்டமும் ஒரு முக்கியப் பகுதியாக வைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக தமிழ் திரைப்படங்களுக்கும், பிற இயக்குனர்களுக்கும் அதிகம் இசையமைக்க ஒத்துக்கொள்ளாத, ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த திரைப்படத்தின் கதையைக் கேட்டு, இது நாட்டுப்புற இசைக்கும் கர்நாடக இசைக்கும் முக்கியத்துவமுள்ள படமாக இருக்குமென இசையமைக்க சம்மதித்ததோடு, தனித்துவமான இசையை வழங்கியுள்ளார்.
ஒளிப்பதிவுக்கு நீரவ்ஷா ஆயிரத்தில் ஒருவன், ஆர்ட் டைரக்ஷனுக்கு ஆயிரத்தில் ஒருவன்’ பட்த்தில் கலை இயக்குநராக பணிபுரிந்த சந்தானம், தேசியவிருது பெற்ற எடிட்டர் கே.எல்.பிரவினின் படத்தொகுப்பு, வசனத்திற்கு பிரபல இலக்கிய எழுத்தாளர் ஜெயமோகன் என பிரமாண்ட கூட்டணியை உருவாக்கி வேலை வாங்கியிருக்கிறார் வசந்தபாலன்.
படம் முழுக்க நாடகம் தொடர்பான காட்சிகள் இருப்பதால் ஒப்பனையும் இப்படத்தில் மிக முக்கியமான அங்கம் வகிக்கிறது. தென்னிந்தியாவின் மிகச் சிறந்த ஒப்பனைக் கலைஞரான பட்டணம் ரசீத் அவர்கள் இப்படத்தில் ஒப்பனைக் கலைஞராக பணி புரிந்துள்ளார்.
இப்படத்தின் கதை உருவாக்கத்திற்காக மதுரை புதுக்கோட்டை திண்டுக்கல் கரூர் என முக்கியமான நாடக சங்கங்களில் உள்ள மூத்தக் கலைஞர்களிடம் கலந்து ஆலோசித்து ஒரு வருடத்திற்கும் மேலாக கள ஆய்வு செய்யப்பட்டுள்ளது. படம் நாடகக் கலைஞர்களின் வாழ்க்கை பற்றியதென்பதால் படம் முழுக்க நிறையன் நிஜ நாடகக் கலைஞர்கள் வேலை செய்துள்ளனர்.
கவிஞர் வாலி அவர்கள் கடைசியாக எழுதிய பாடலான ‘கிருஷ்ண விஜயம்’ பாடல் இப்படத்தில் இடம் பெற்றுள்ளது. மறைந்த நடன இயக்குநர் ரகுராம் அவர்களும் இப்படத்தில் இரண்டு பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார்.
இயக்குநர் வசந்தபாலன், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், பா.விஜய், தம்பி ராமைய்யா, பட்டணம் ரஷீத், எடிட்டர் பிரவீன், காஸ்ட்யூமர் செல்வம் என ஏழு பேர் தேசிய விருது பெற்ற கலைஞர்கள் இப்படத்தில் பங்காற்றியுள்ளனர். ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் சசிகாந்த் மிகுந்த பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் இந்தப்படம் வெளியாக உள்ளது.
238421 467561this is really intriguing. thanks for that. we need to have a lot more web sites like this. i commend you on your excellent content material and outstanding subject choices. 956013
884823 266940I got what you intend, saved to fav, very good internet site . 480301