ஏப்-23ல் ‘காவல்’ இசைவெளியீடு..!

 

இயக்குநர் சீமான் மற்றும் சுசிகணேசனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய நாகேந்திரன் தற்போது ‘காவல்’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். இதற்குமுன் இந்தப்படத்திற்கு ‘நீயெல்லாம் நல்லா வருவடா’ என பெயர் வைத்திருந்தவர், காவல்துறை உயர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி இப்போது ‘காவல்’ என பெயரை மாற்றியுள்ளார். இந்தப்படத்தில் விமலும், இயக்குனர் சமுத்திரக்கனியும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.

வெளிநாடுவாழ் தமிழ்ப்பெண்ணான அமிர்தா ஹீரோயினாக அறிமுகமாகிறார். ‘அறிந்தும் அறியாமலும்’, ‘பட்டியல்’போன்ற படங்களை தயாரித்த புன்னகைப்பூ கீதா, எஸ்.ஜி.பிலிம்ஸ் மற்றும் கிளாப் சினிமாஸ் உடன் இணைந்து இந்தப்படத்தை தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 23ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

அறிந்தும் அறியாமலும்எஸ்.ஜி.பிலிம்ஸ்ஏகாம்பரம்காவல்சமுத்திரக்கனிசீமான்ஜி.வி.பிரகாஷ்நாகேந்திரன்நீயெல்லாம் நல்லா வருவடாபட்டியல்புன்னகைப்பூ’ கீதாவிமல்