தீபாவளி மெகா ரிலீஸ் ; 1700 தியேட்டர்களில் ‘காஷ்மோரா’..!

கார்த்தி இதுவரை நடித்த படங்களில் பிரமாண்டமாக உருவாகி இருப்பது மட்டுமல்ல, கார்த்தி நடித்த படங்களில் பிரமாண்டமாக ரிலீஸாக இருக்கும் படமும் ‘காஷ்மோரா’ தான். ஆம்.. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்-28ஆம் தேதி உலகம் முழுவதிலும் சேர்த்து கிட்டத்தட்ட 1700 தியேட்டர்களில் வெளியாக இருப்பதாக படத்தை தயாரித்துள்ள ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதற்கேற்ற மாதிரி இந்தப்படத்தின் வெளியீட்டில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ், சினி கேலக்சி, ரிலையன்ஸ், ஏ.பி.இன்டர்நேஷனல், பிவிபி சினிமா என மிகப்பெரிய நிறுவனங்கள் கைகோர்த்துள்ளன. ஆக சந்தேகமே இல்லாமல் ‘காஷ்மோரா’ படம் மெகா ரிலீஸ் தான்.

இயக்குனர் கோகுல் இயக்கியுள்ள இந்தப்படத்தின் ட்ரெய்லரில் கார்த்தியின் கெட்டப்புகள் நம்மை மிரட்டுகின்றன.. ஆனால் ட்ரெய்லரை வைத்து இதுதான் படத்தின் கதை என எந்த யூகங்களையும் பண்ணனவிடாமல் நம் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்கவே வைத்துள்ளார்கள்.

KaashmoraKarthiNayantharaSri Divyaகார்த்திகாஷ்மோராகோகுல்