பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் ‘காலா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ரஜினி ஸ்டைலாக ஒரு ஜீப்பின் மீது சிரித்தபடி அமர்ந்து இருக்கும் போஸ்டர் செம வைரலாகியுள்ளது.. ரஜினி அமர்ந்திருக்கும் இந்த ஜீப் மஹிந்திரா நிறுவனத்தின் தயாரிப்பான மஹிந்திரா தர் SUV வகையை சேர்ந்தது.
மஹிந்திரா நிறுவனம் தங்களது தயாரிப்பு உட்பட மோட்டார் வாகனங்களின் சில அரிய பொருட்களை மஹிந்திரா ஆட்டோ மியூசியத்தில் கண்காட்சிக்கு வைத்து பாதுகாத்து வருகிறார்கள்.. மஹிந்திரா நிறுவனத்தின் எம்.டியான ஆனந்த் மகிந்த்ரா, “ரஜினி ஸார் பயன்படுத்திய இந்த ஜீப் ஒரு சிம்மாசனத்திற்கான தகுதி பெற்றுவிட்டது.. இதை எங்களது மியூசியத்தில் வரலாற்று பொக்கிஷமாக பாதுகாக்க விரும்புகிறோம்” என தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.