தமிழில் ‘பலம்’ ஆக வெளியாகிறது இந்தி ‘காபில்’..!

சமீபத்தில் ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் சஞ்சய் குப்தா இயக்கத்தில் உருவான ‘காபில்’ என்கிற படம் தமிழில் ‘பலம்’ என்கிற பெயரில் வெளியாக உள்ளது. இதில் ஹ்ரித்திக் ரோஷன் கண்பார்வையற்றவராக நடித்துள்ளார். கதாநாயகியாக யாமி கௌதம் நடித்துள்ளார்.

இதை தமிழில் மொழிமாற்றம் செய்ய காரணம் இதன் அற்புதமான கதைதானாம். 31 வயதான பிண்ணனி குரல் கலைஞனான ரோஹன் தனது பெரும்பான்மையான வாழ்கையை ஸ்டுடியோக்களிலும், இரவை தனது இல்லத்திலும் கழிக்கிறான்.

பிறப்பிலேயே பார்வையற்றவனான ரோஹனுக்கு அனைவரும் வாழும் ஒரு சாதரணமான வாழ்க்கையை மேற்கொள்வதே அவன் வாழ்வின் கனவாக இருக்கிறது. ஒரு தருணத்தில் சுப்ரியாவை சந்திக்க நேரும் அவன் அவள் மீது காதல் வயப்படுகிறான்.

ரோஹனின் நேர்மையும், தன்னம்பிக்கையும் அவளை கவர்கிறது. ஒருவர் மீது ஒருவர் பேரன்பை வைத்திருக்கும் நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். இவர்கள் இருவரும் இணைந்திருந்தால் வாழ்வில் எதுவும் சாத்தியமே என்ற நிலையில் எதிர்பாராத விதமாக ரோஹன், சுப்ரியாவை பிரிய நேரிடுகிறது.

சுப்ரியாவின் பிரிவு ரோஹனின் வாழ்க்கையை இருளில் தள்ளி தனிமை படுத்துகிறது. சுப்ரியா பிரிவின் காரணத்தை ஆராய முற்ப்படும் ரோஹனுக்கு, தன்னை சுப்ரியா பிரிந்ததற்கான உண்மை புலப்படுகிறது. தன்னை தனிமை படுத்தியவர்களுக்கெதிரான யுத்தத்தில் ஈடுபடுகிறான் ரோஹன். அதில் தனது லட்சியத்தை ரோஹன் அடைந்தானா என்பது தான் க்ளைமாக்ஸ்.

இந்தப்படம் ஜன-25ஆம் தேதி திரைக்கு வருகிறது.

BalamHrithik RoshanKaabilகாபில்சுப்ரியாபலம்யாமி கௌதம்ஹ்ரித்திக் ரோஷன்