குறிப்பாக இவர் இயக்கத்தில் வெளியான ஒரு நேரடி தெலுங்கு படமான ‘சங்கராபரணம்’ தமிழ்நாட்டில் அள்ளிக்குவித்த வசூல் அப்போது இந்திய திரையுலகையே திரும்பிப்பார்க்க வைத்தது. 1965ல் இவர் முதன்முதலாக இயக்குனராக அறிமுகமானபோது இவரின் முதல் ஹீரோவாக நடித்தவர் தான் மறைந்த மாபெரும் நடிகர் நாகேஸ்வரராவ்..
கமலின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான இவர் இயக்கிய ‘சலங்கை ஒலி’, ‘சிப்பிக்குள் முத்து’ ஆகியவை இன்றளவும் கமல் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. இதோ இப்போதுகூட கமலுடன் ‘உத்தம வில்லன்’ படத்தில் நடித்திருக்கிறார். இன்று பிறந்தநாள் காணும், 85 வயதிலும் சுறுசுறுப்பான இளைஞர், மாமனிதர் கே.விஸ்வநாத்திற்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.