துப்பறியும் நிபுணர்களாக மாறிய பாக்யராஜூம், மொட்டை ராஜேந்திரனும்..!

‘ஸ்ட்ராபெர்ரி’ படத்தைத் தொடர்ந்து ‘ஆருத்ரா’ என்கிற படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார் ‘வித்தக கவிஞர்’ பா விஜய். இதில் கேபாக்யராஜ், மொட்டை ராஜேந்திரன், மும்பையை சேர்ந்த மாடலிங் மங்கை தக்ஷிதா, கொல்கத்தாவைச் சேர்ந்த மேகாலீ, ஹைதராபாத்தைச் சேர்ந்த சோனி ஆகிய மூன்று பேர் கதாநாயகிகளாக அறிமுகமாகிறார்கள்.

இவர்களுடன் நடிகர் விக்னேஷ், ஒய் ஜி மகேந்திரன், மயில்சாமி, அபிசேக், கண்ணன், பேராசிரியர் ஞானசம்பந்தம், இயக்குநர் ஏஸ் ஏ சந்திரசேகர், மீரா கிருஷ்ணா, சஞ்சனா சிங், பேபி யுவா, ஆகியோர் நடித்திருக்கிறார்கள்இந்த படத்தில் இவருடைய தந்தையாக வித்தியாசமான தோற்றத்தில் இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் நடித்திருக்கிறார். சிவமலை என்ற கேரக்டரில் தொன்மையான பொருட்களை விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியராக பா.விஜய் நடித்துள்ளார்.

படம் பற்றி பா.விஜய் கூறும்போது, “இது ஒரு எமோஷனல் வித் க்ரைம் திரில்லர் ஜேனரில் உருவாகியிருக்கிறது. இதில் இயக்குநர் கே பாக்யராஜும், மொட்டை ராஜேந்திரனும் துப்பறியும் நிபுணர்களாக சுவராசியமான கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள். இரண்டு மூன்று சம்பவங்களை பார்த்து, கேட்டு, படித்த பின் தான் இந்தப்படத்தின் திரைக்கதையை எழுத தொடங்கினேன். எழுதி முடித்தபின் இந்த திரைப்படத்தை நானே இயக்க திட்டமிட்டேன்.

சென்னை, பாண்டிசேரி, ஜெய்ப்பூர், ராஜஸ்தான், ஹரித்துவார், குலு, மணாலி ஆகிய இடங்களில் படபிடிப்பு நடைபெற்றது. மொத்தம் எண்பத்தைந்து நாள்கள் படபிடிப்பு நடைபெற்றிருக்கிறது. படத்தில் நாற்பது நிமிடத்திற்கு கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெறவிருப்பதால் அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

ஆருத்ரா என்பது ஒரு கதாபாத்திரத்தின் பெயர். இந்த படத்தில் மூன்று நாயகிகள் இருந்தாலும் காதல் காட்சிகள் என்று தனியாக எந்த காட்சிகளும் இல்லை. இந்த படம் அனைத்து பெற்றோர்களும் தெரிந்து கொள்ளவேண்டிய ஒரு செய்தியை கொண்டிருக்கிறது. இந்த படத்தின் கதையை பெற்றோர்கள் உணர்ந்தால், அவர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு எப்படியெல்லாம் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதையும், எப்படியெல்லாம் பாதுகாப்பு அளிக்க முடியும் என்பதையும் தெரிந்துகொள்வார்கள். சிறிது

AruthraK BackyarajMottai RajendranPa Vijayஅபிசேக்இயக்குநர் ஏஸ் ஏ சந்திரசேகர்ஒய்.ஜி.மகேந்திரன்கண்ணன்சஞ்சனா சிங்பேபி யுவாபேராசிரியர் ஞானசம்பந்தம்மயில்சாமிமீரா கிருஷ்ணாவிக்னேஷ்