இந்தியில் நடிகை வித்யாபாலன் நடித்த, பெரும் ஹிட்டான ‘தும்ஹரி சுளு’ படத்தின் தமிழ் ரீமேக்கை ராதாமோகன் இயக்குகிறார். இதன் கதையின் நாயகியாக ஜோதிகா நடிக்க, கதையின் நாயகனாக விதார்த் நடிக்கவுள்ளார். இப்படத்தை போஃப்டா நிறுவனம் சார்பில் தனஞ்ஜெயன் தயாரிக்கிறார்.
மொழி படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து ராதாமோகன்-ஜோதிகா கூட்டணியில் உருவாகவுள்ள இந்தப்படத்திற்கு ‘காற்றின் மொழி’ என டைட்டில் அறிவித்து அதை பர்ஸ்ட் லுக் போஸ்டராக வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரை மதன் கார்க்கி வெளியிட்டுள்ளார்.