ஜோதிகாவின் புதிய படத்தை தயாரிக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்

‘ஜோக்கர்’ மாதிரியான சமூக நோக்கிலான கதைகளையும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ போன்ற பிரமாண்டமான பரீட்சார்த்த படங்களையும் தயாரித்த ‘ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு ஜோதிகா நடிக்கவுள்ள புதிய படத்தை தயாரிக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் 21-வது படமாகும். இதற்கான பூஜை நேற்று நடத்தப்பட்டது. இந்த வார இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும்.

இப்படத்தை அறிமுக இயக்குநர் எஸ்.ராஜ் என்பவர் இயக்குகிறார். இதில் ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, பூர்ணிமா பாக்யராஜ், சத்யன், ஹரிஷ் பெராடி, கவிதா பாரதி மற்றும் பல முக்கிய நடிகர், நடிகைகள் நடிக்கவுள்ளனர்.

தனது இரண்டாவது சுற்றில் தான் நடிக்கும் படங்களைத் தேர்வு செய்வதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுகிறார் ஜோதிகா. திருமணத்திற்கு பிறகு அவர் நடித்த ’36 வயதினிலே’ படம் வெற்றி பெற்றத்தைத் தொடர்ந்து ‘மகளிர் மட்டும்’ படமும் நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. தனக்கு முக்கியத்துவம் தரும் கதை மட்டும் தான் வேண்டும் என்றில்லாமல், நிஜ வாழ்க்கையோடு ஒன்றி போகும் கதாபாத்திரமாகவும் இருக்க வேண்டும் கவனமாக இருக்கிறார்.

இதன் மூலம் முன்பை விட அதிக ரசிகர்களை தன்வசப்படுத்தி வருகிறார். அதற்கு சான்றாக இந்த வாரம் வெளியாகிறது அவர் நடித்த ‘காற்றின் மொழி’. இப்படம் வெளியாவதற்கு முன்பே ஜோதிகாவைப் பற்றியும், படத்தைப் பற்றியும் மிகுந்த எதிர்பார்ப்பை (குறிப்பாக பெண்களிடம்) ஏற்படுத்தியிருக்கிறது

Dream warriorsJyothikaS R PrabhuSivakumarSuriyaஎஸ்.ஆர்.பிரபுசிவக்குமார்சூர்யாஜோதிகாட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ்