மே-15ல் சூர்யாவுக்கு பதிலாக ஜோதிகா..!

மே-8 ஆம் தேதி தான் சூர்யா நடித்துள்ள மாஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கிறது.. அதனால் ஏற்கனவே எதிர்பார்த்தபடி மே-15ல் மாஸ் படம் ரிலீஸ் இல்லை என்பது ரசிகர்களை வருத்தப்பட வைத்தாலும் பொன் வைக்கிற இடத்தில் பூ வைப்பது போல.. இல்லையில்லை.. இன்னொரு பொன்னை வைத்து ரசிகர்களை திருப்திப்படுத்த இருக்கிறார் சூர்யா..

ஆம். தனது 2டி நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக ஜோதிகா நடித்துள்ள ’36 வயதினிலே’ படத்தை மே-15ஆம் தேதி ரிலீஸ் செய்கிறார் சூர்யா.. எட்டு வருடங்கள் கழித்து மீண்டும் நடிக்க வந்துள்ள ஜோதிகாவுக்கு, கௌரவமான மறுபிரவேசமாக இந்தப்படம் அமையும் என அடித்து சொல்லலாம்.

2டி நிறுவனம்..!36 வயதினிலேசூர்யாஜோதிகாமாஸ்