ஜோதிகாவுக்கு பதிலாக விஜய் படத்தில் இணைந்தார் நித்யா மேனன்..!

‘தெறி’ படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தை அட்லி மீஎண்டும் இயக்குகிறார் என்பதும் இதை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது என்பதும் தெரிந்ததுதான்.. இந்தப்படத்தின் மூன்று கதாநாயகிகளாக ஜோதிகா, சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தனர்.. இந்த மூவருமே தங்களது கேரியரில் விஜய்யுடன் மூன்றாவதாக இணைந்து நடிக்கும் என்கிற பெருமையும் இந்தப்படத்துக்கு கிடைத்தது.

சில நாட்களுக்கு முன் இந்தப்படத்தின் படப்பிடிப்பும் துவங்கி நடைபெற்று வருகிறது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாகவே சில காரணங்களால் ஜோதிகா இந்தப்படத்தில் இருந்து விலகிவிட்டார் என்று சொல்லப்பட்டு வந்தது.. தற்போது அதை உறுதிசெய்யும் விதமாக ஜோதிகாவுக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் நித்யா மேனன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

AtleeVijayVijay 61அட்லிகாஜல் அகர்வால்சமந்தாஜோதிகாநித்யா மேனன்விஜய்