பிரபாஸின் ராதே ஷ்யாம் படத்திற்கு 4 மொழிகளில் இசையமைக்கும் ஜஸ்டின் பிரபாகரன்


சாஹோ படத்திற்கு பிரபாஸ் நடிப்பில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ‘ராதே ஷியாம்’. காதல் ததும்பும் கதாபாத்திரத்தில் பத்து வருடங்களுக்கு பிறகு இப்படத்தில் பிரபாஸ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ராதா கிருஷ்ண குமார் இயக்கும் திரைப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது.

இந்தப்படத்தின் ப்ரீ-டீசர் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், ‘ராதே ஷியாம்’ பன்மொழிப்படமாக உருவாகி வரும் காரணத்தால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திறமையான இசையமைப்பாளர்கள் ‘ராதே ஷியாம்’ படத்தில் ஒன்றிணைந்துள்ளார்கள். இந்திய சினிமா இதுவரை கண்டிராத வகையில், இத்திரைப்படத்தின் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமாகவும், வித்தியாசமாகவும், விருந்து படைக்கும் வகையிலும் இருக்கும்.

‘ராதே ஷியாமின்’ இந்தி பதிப்பிற்கு மிதுன் இரு பாடல்களுக்கும், மனன் பரத்வாஜ் ஒரு பாடலுக்கும் இசையமைத்துள்ளனர். பிரபல கவிஞர்களான குமார் மற்றும் மனோஜ் முன்தஷிர் ஆகியோர் பாடல்களை இயற்றியுள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட பதிப்பிற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, கிருஷ்ணகாந்த் பாடல் வரிகளை எழுதியுள்ளார். தமிழில் ஒருநாள் கூத்து, பண்ணையாரும் பதிமினியும் உள்ளிட்ட பல படங்களில் ஹிட் பாடல்களை கொடுத்த ஜஸ்டின் பிரபாகரன், தற்போது பிரபாஸ் படத்திற்கு இசையமைப்பதன் மூலம் தென்னிந்திய அளவில் கவனம் பெற்றுள்ளார்.

BahubaliJustin Prabhakaranorunal koothuPannaiyarum PadminiyumPooja HegdePrabhasradhe shyamSaaho