மிகப்பெரிய எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் ஏற்படுத்தி வருகிறது சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்துள்ள ‘கபாலி’ திரைப்படம். இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தருக்கு அடுத்து என்னை வேலைவாங்கியவர் பா.ரஞ்சித் தான் என சூப்பர்ஸ்டாரே புகழாரம் சூட்டியுள்ளதால் அந்த எதிர்பார்ப்பு இரு மடங்காகியுள்ளது.
இந்தநிலையில் ‘கபாலி’ படத்தின் இசைவெளியீட்டு விழாவை வரும் ஜூன் 12ஆம் தேதி நடத்த தீர்மானித்துள்ளார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.. இந்தப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரஜினியுடன் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், அட்டகத்தி தினேஷ், கிஷோர் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.