ஜூன்-19ல் 2 படங்களை அதிரடியாக ரிலீஸ் செய்யும் ஜே.எஸ்.கே பிலிம்ஸ்..!

தரமான படங்களை தயாரித்து வெளியிடும் ஜே எஸ் கே பிலிம் நிறுவனம் வரும் ஜூன்-19ல் தனது இரண்டு தயாரிப்புகளை ஒரே நாளில் அதிரடியாக ரிலீஸ் செய்ய இருக்கிறது. ஒன்று பல திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு சர்வதேச விருதுகளை பெற்றதுடன் தேசிய விருதையும் பெற்ற குற்றம் கடிதல் படம்.. விருதுகளை வெல்லும் ஒரு சராசரி கலைப்படமாக இல்லாமல். விறுவிறுவென நகர்ந்து செல்லும், நெஞ்சை படபடக்க வைக்கும் ஆழ்ந்த சமூக கருத்துடன் கூடிய ஒரு த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது.

மற்றொன்று அருள்நிதி, ரம்யா நம்பீசன் நடிப்பில் காமெடி கலந்து கலகலப்பாக உருவாகியுள்ள ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ படம். இது நான்கு போலீஸ்காரர்கள் தங்கள் வேலையை தக்க வைக்க செய்யும் பல தந்திரங்களைப் பற்றி நகைச்சுவையாக விவரிக்கிறது. இவற்றை ஒரே நாளில் வெளியிட காரணம் இரண்டு படங்களின் மீதும் ஜே.எஸ்.சதீஷ்குமார் வைத்திருக்கும் அபரிமிதமான நம்பிக்கை தான்.

குற்றம் கடிதல்’ஜே எஸ் கேநாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்