இனி இணையதளம் தான் ; ஜே.எஸ்.கே அதிரடி முடிவு…!

ஜூலை-31ஆம் தேதி ரிலீஸாவதாக பிளான் பண்ணப்பட்டிருந்த ஜேஎஸ்கே சதீஷ்குமாரின் ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ படம் வரும் வெள்ளிக்கிழமையே திரைக்கு வரவிருக்கிறது. அன்றைய தினம் பெரிய படங்கள எதுவும் ரிலீஸ் இல்லாத நிலையில், அந்த சூழலை தனக்கு சாதகமாக மாற்றி படத்தை வெளியிடுகிறார் சதீஷ்குமார்.

அதுமட்டுமல்ல, தயாரிப்பாளர் சங்க புதிய தீர்மானம் ஒன்றை தனது படத்தின் மூலம் முதல் ஆளாய் பயன்படுத்தவும் போகிறார். அதாவது ஒரு படத்தின் உரிமையை எந்த தொலைக்காட்சி வாங்குகிறதோ அந்த டிவிக்கு மட்டுமே பாடல்கள் மற்றும் காட்சிகள் கொடுக்க வேண்டுமென தயாரிப்பாளர் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனை அனைத்து தயாரிப்பாளர்களும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இதனை வருகிற ஜூலை 31ம் தேதியிலிருந்து அமலுக்கு கொண்டுவரப்போவதாக தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஆனால் இந்த தீர்மானத்தை தன்னுடைய படமான “நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்” படத்திலிருந்தே செயல்படுத்தப்போகிறேன் என்று கூறியுள்ளார் சதீஷ்குமார்..

மேலும், “இணையதளங்களை நம்பித்தான் இன்று உலகமே இருக்கிறது நானும் அப்படித்தான். மலையாளத்தில் ‘பிரேமம்’ பட வெற்றிக்கு முக்கிய காரணம் இணையதளம் தான். அதனால் தொலைக்காட்சிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைவிட இனிமேல் அதிக அளவு இணையத்திற்கு தரப்போகிறேன்” என்கிற புதிய முடிவையும் எடுத்துள்ளார் சதீஷ்குமார்..

ஜே எஸ் கேநாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்பிரேமம்