காஞ்சனா போன்ற பேய்ப்படங்களுக்கும் சுந்தர்.சி டைப்பிலான நகைச்சுவை படங்களுக்கு மட்டுமே குடும்பம் குடும்பமாக வந்த பேமிலி ஆடியன்ஸை ’36 வயதினிலே’ படம் மூலம் பெண்களுக்கான படங்களையும் நோக்கி தியேட்டருக்கு வரும்படி திசை திருப்பிவிட்டுள்ளார் ஜோதிகா. அதுமட்டுமல்ல பெண்களை மையப்படுத்திய படங்கள் ஒரு காலத்தில் வசூலை அள்ளிய அந்த பழைய ட்ரெண்டையும் புதுப்பித்து வைத்துள்ளார் ஜோதிகா.
210 தியேட்டர்களில் வெளியான இந்தப்படம் இதுவரையிலான ஐந்து நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் ஏழுகோடி வசூலித்துள்ளது என குறிப்பிடும் ஸ்டுடியோகிரீன் மேலாளார் சக்திவேலன், இதே ரீதியில் போனால் கலெக்சன் 18 முதல் 20 கோடியை எளிதாக தொட்டுவிடும் என்கிறார். அதற்கேற்றமாதிரி படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பை தொடர்ந்து, நாளை முதல் பல தியேட்டர்களில் உள்ள பெரிய திரையங்குகளுக்கு இந்தப்படத்தை மாற்றி திரையிடுகிறார்கள்..
இதைவிட அதிசயம் என்னவென்றால் எப்போதுமே இளசுகளின் கூட்டத்தால் மட்டுமே கல்லா காட்டிவந்த ‘மாயாஜால்’ தியேட்டர் இப்போது ’36 வயதினிலே’ படத்தை பார்க்க வரும் பேமிலி ஆடியன்ஸால் தொடர்ந்து களைகட்டி வருவதை பார்த்து, மாயாஜால் தியேட்டரின் மேனேஜர் மீனாட்சி சுந்தரம் ‘இட்ஸ் மிராக்கிள்’ என அலறாத குறை தானாம்.