8 தோட்டாக்கள் புகழ் வெற்றி நாயகனாக நடிக்கும் ஜீவி. சில நேரங்களில், ஒரு படத்தின் ஜானர் மாதிரியே படப்பிடிப்பும் மிக வேகமாக முடியும். ஜீவி படம் இதற்கு சரியான உதாரணம்.. ஒரு விறுவிறுப்பான திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் அத்தனை வேகத்தில் ஒரே கட்டமாக முடிக்கப்பட்டிருக்கிறதாம்..
தீவிரமான சஸ்பென்ஸ் விஷயங்களை கொண்ட இந்த ஜீவி, விஞ்ஞானம் மற்றும் உள்ளுணர்வுகளுக்கு இடையே உள்ள மனித உணர்வுகளை பற்றி பேசியிருக்கிறது. 8 தோட்டாக்களில் தனது நடிப்பு திறனை நிரூபித்த வெற்றி, வழக்கத்திற்கு மாறான நாயகன் கதாபாத்திரத்தில் மீண்டுமொரு முறை நடித்திருக்கிறார்
இதுபற்றி இயக்குனர் வி.ஜே.கோபிநாத் கூறும்போது, “தயாரிப்பாளரின் முழுமையான ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியமில்லை. எனக்கு படைப்பு சுதந்திரத்தை வழங்குவதில் அவர் உண்மையாக செயல்பட்டது என் வேலையை மிகவும் எளிதாக்கியது. மேலும், அத்தகைய குணங்களை கொண்ட ஒரு தயாரிப்பாளர் கிடைப்பது எந்தவொரு இயக்குனருக்கும் ஒரு வரம்” என்றார்.
“எல்லா புகழும் இயக்குனர் வி.ஜே. கோபிநாத் அவர்களுக்கே. அவர் ஒரு புதுமுக இயக்குனராக இருந்தாலும், அவரது சரியான திட்டமிடல் மற்றும் அதை சமாளித்த அவரது திறமை எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது” என்கிறார் தயாரிப்பாளர் எம்.வெள்ள பாண்டியன். ஒரு அறிமுக இயக்குனர் வழக்கத்திற்கு மாறான கதையுடன் அல்லது சிறப்பான கதை சொல்லும் திறனால் ஒரு தயாரிப்பாளரை ஈர்க்கக் கூடும். ஆனால் குறித்த காலத்துக்குள் படத்தை முடித்து கொடுப்பது அரிது. ஆனால் கோபிநாத் இத்தகைய திறன்களை நிரூபித்தது நினைத்து நான் மகிழ்கிறேன்” என்றார்.