ஜீவா, துளசி நடிக்க ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இயக்கிவரும் ‘யான்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.. மொராக்கோவில் இதன் படப்பிடிப்பு நடந்தபோது ஒளிப்பதிவாளருக்கு காயம் ஏற்பட்டு அவர் இந்தியா திரும்பவேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனால் படத்தை இயக்கும் ரவி கே.சந்திரனே கேமராவையும் கவனிக்க வேண்டியதாயிற்று..
ஆட்களும் தேவையான அளவில் தான் சென்றிருந்ததால் படத்தின் ஹீரோ ஜீவாவே அவ்வப்போது தற்காலிக உதவி இயக்குனராக மாறி நடிகர்களை ஒருங்கிணைப்பது, சக நடிகர்களுக்கு வசனம் சொல்லிக்கொடுப்பது, லொக்கேஷன் மாற்றுவது உட்பட பல வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு கவனித்தாராம்.
கார்த்தி, விஷால் எல்லாம் உதவி இயக்குனர்களாக வேலை பார்த்வர்கள் தான். அதேமாதிரி ஜீவாவும் டைரக்ஷன் டிபார்ட்மெண்ட்டில் வேலை பார்த்ததால் பல நுணுக்கங்களை கற்றுக்கொண்டிருப்பார் என நம்பலாம்.