கடந்த சில வருடங்களை போல அல்லாமல் ஜீவாவின் திரையுலக வாழ்க்கை இந்த வருடத்தில் மீண்டும் ஏற்றம் காணும் என்பது அவர் நடிக்கும் படங்களை கவனிக்கும்போது நன்றாகவே தெரிகிறது. வெற்றி உறுதி என சொல்லி அடிக்கும் கில்லியான சுந்தர்.சியின் டைரக்சனில் நடிக்கும் ‘கலகலப்பு-2’ அதற்கு உதாரணம்..
இதுதவிர ‘நாடோடிகள்’ தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிபில் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த காலீஸ் இயக்கியுள்ள ‘கீ’ படமும் ஜீவாவிற்கு நம்பிக்கை தரும் படமாகவே உருவாகியுள்ளது. கதாநாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். மற்றும் ஆர்.ஜே.பாலாஜி, அனைகா சோட்டி, சுகாசினி ஆகியோர் முக்கியமான வேடத்தில் நடிக்கின்றனர்.
இந்தப்படம் வரும் பிப்-9ஆம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் ஜன-19ஆம் தேதி நடைபெற உள்ளது.