ஆர்யாவை வைத்து ‘ஒரு கல்லூரியின் கதை’ படத்தை இயக்கிய இயக்குனர் ரவி நந்தா பெரியசாமியின் லேட்டஸ்ட் படைப்பு தான் ஜிகினா’ இந்தப்படத்தில் விஜய்வசந்த் கதாநாயகனாக நடிக்கிறார்.. சானியதாரா என்பவர் கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தை ஸ்டார்ட் ஆக்ஷன் சொல்லி துவக்கி வைத்தவர் இயக்குனர் லிங்குசாமி தான்…
இப்போது படம் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ள நிலையில் இந்தப்படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமே வெளியிடவும் இருக்கிறது.. வரும் ஆகஸ்ட்-21ஆம் தேதி இந்தபடம் வெளியாக இருக்கிறது. கோலிசோடா, சதுரங்க வேட்டை வரிசையில் இந்தப்படம் திருப்பதி பிரதர்ஸுக்கு வெற்றி மகுடம் சூட்டும் என்கிறார் லிங்குசாமி.
தங்களது நிறுவனம் வெளியிடும் படங்கள் ஓடுவது அதிர்ஷ்டத்தால் அல்ல, நல்ல கதையம்சமும் அதை சரியாக படமாக்கிய இயக்குனரும் தான் என்கிற லிங்குசாமி, அதை இனம் கண்டு வாங்குவதில் தான் சாமர்த்தியம் இருக்கிறது என்கிறார்..
சமூக வலைதள குற்றங்களையும் அதனால் சமூகத்தில் பெருகும் குற்றங்களையும் பின்னணியாக வைத்து இந்தபடம் உருவாகியுள்ளதாம். மேலும் இந்தப்படத்தில் கும்கி அஸ்வின், சிங்கம்புலி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். பாடல்களை யுகபாரதி எழுத, ஜான் பீட்டர் இந்தப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.