நம்பிக்கை துரோகம் செய்ய விரும்பாத ஜீவன்..!

திருட்டுப்பயலே, நான் அவனில்லை போன்ற ஹிட் படங்களில் நடித்த ஜீவன், அந்த படங்களின் வெற்றியால் உச்ச நடிகர் பட்டியலை நோக்கி சென்று கொண்டிருந்தார் அவர். அந்த சமயத்தில், நமக்கொரு மினிமம் கேரன்டி நடிகர் கிடைத்து விட்டார் என்று அவரைத்தேடி படாதிபதிகளும், படைப்பாளிகளும் படையெடுக்கத் தொடங்க, ஜீவன் காட்டில் அப்போது ஒரே அடைமழைதான்..

ஆனால் கால வெள்ளத்தில் சிக்கி ஜீவனும் தோல்விப்படங்களை கொடுத்து சரிவை சந்தித்தார். தற்போது, மீண்டும் சினிமாவில் தலைதூக்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் ஜீவனுக்கு, தான் இயக்கும் ‘அதிபர்’ படம் மூலம் கைகொடுத்துள்ளார் இயக்குனர் சூர்யபிரகாஷ். ‘மாயி’ படத்தின் மூலம் சரத்குமாரை வித்தியாசமாக காட்டினாரே அந்த இயக்குனர்தான்.

செத்தாலும் யாருக்கும் நம்பிக்கைத் துரோகம் செய்ய மாட்டேன். என்று வாழ்க்கையை வகுத்துக் கொண்டு வாழும் சிவா கதாபாத்திரத்தில் ஜீவன். நம்பிக்கைத் துரோகத்தையே நிரந்தர தொழிலாகக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் ஈஸ்வரன் கதாபாத்திரத்தில் ரஞ்சித். இருவருக்குள்ளும் நடக்கும் போராட்டம் தான் அதிபர் படத்தின் கதை.. ஹைலைட்டான விஷயமாக சமுத்திரக்கனி முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.

Jeevanஅதிபர்சூர்யபிரகாஷ்ஜீவன்திருட்டுப்பயலேநான் அவனில்லை