மயான கொள்ளையில் ஜெயம் ரவி..!

வட சென்னையின் குத்துச்சண்டை கலாச்சாரத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் ‘பூலோகம்’. ஜெயம் ரவி ஜோடியாக த்ரிஷா நடிக்க, ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில், கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில், ஸ்ரீகாந்த் தேவாவின் இசையமைப்பில் உருவாகியுள்ளது இந்த ‘பூலோகம்’.

தமிழ்நாட்டின் மிக முக்கிய கலாசார விழாவாக கொண்டாடப்படும் மசான கொள்ளை என்று அழைக்கப்படும் மயான கொள்ளை திருவிழா இன்று தமிழகமெங்கும் விமரிசையாக கொண்டாட படுகிறது. இந்தப்படத்தின் சில முக்கிய காட்சிகள் இந்த மசான கொள்ளையை முன்னிட்டு படமாக்கப்பட்டுள்ளது.

இந்த கலாசாரத்தை முழுமையாகக் காண்பதற்காக ஜெயம் ரவி உள்ளிட்ட படக்குழுவினர் சென்னை அங்காள பரமேஸ்வரி கோவிலுக்கு விஜயம் செய்தனர். இந்த விழாவை கண்ட ஜெயம் ரவி.

இந்த அனுபவம் முற்றிலும் புதுமையானது. இந்த மண்ணின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் ஒரு மண்ணின் மணம் சார்ந்த படத்தில் நடிப்பது எனக்கு அளவிட முடியாத பெருமை பூலோகம் போன்ற ‘மாஸ்’ கதையும் , கதை களமும் என்னை மக்களிடம் மிக எளிதாக்க ஐக்கியமாகி விடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை’ என்று கூறியிருக்கிறார் .

Aascar Films Pvt LtdBoologamJayam RaviKalyan KrishnanNimirunthu NilS P JananthanSrikanth DevaTrisha
Comments (1)
Add Comment
  • jav

    112504 730043This post contains wonderful original thinking. The informational content material here proves that items arent so black and white. I feel smarter from just reading this. 461661