ஜெயசூர்யாவுக்கு தேவை ஒரு ‘ஆடு’…!

நம்ம ஆளுங்கதான் இங்க தமிழ்ல டைட்டில் வைக்க முட்டி மோதுறாங்க… ஆனா மலையாளத்துல ஜெயசூர்யா நடிக்கும் ஒரு படத்தின் பெயர் என்ன தெரியுமா.? ‘ஆடு ஒரு பீகர ஜீவியானு’.. அதாவது ‘ஆடு ஒரு மிரட்டலான மிருகம்’ என்று அர்த்தமாம்.. சிவகுமார், ஸ்ரீப்ரியா நடித்த ஆட்டுக்கார அலமேலு’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருந்ததையும் அதன் சாகசங்களையும் மறந்திருக்க மாட்டீர்கள்.

இப்போது அப்படி ஒரு ஆடு, அதுவும் சொன்னபடி கேட்டு நடக்கிற சண்டித்தனம் பண்ணாத பெண் ஆடு kuselanஒன்று படத்திற்கு தேவைப்படுகிறதாம். காமெடி படமாக உருவாகும் இந்தப்படத்துல ஆட்டுக்கு கிட்டத்தட்ட கதாநாயகிக்கு இணையான வேடமாம். உங்ககிட்ட அப்படி ஒரு ஆடு இருந்தா உடனே கேரளாவுக்கு ஒரு டிக்கெட்டை போடுங்க..!

சிவகுமார்ஜெயசூர்யாஸ்ரீப்ரியா