புரட்சித்தலைவி எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் முக்கியமான ஒரு படம் ‘நவரத்தினம்’.. இந்தப்படத்தில் ஒன்பது கதாநாயகிகள் நடித்திருந்தனர்.. அவர்களில் ஒருவர் தான் இந்தி நடிகை ஜரீனா வஹாப். இவர் விஸ்வரூபம், ரத்த சரித்திரம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தற்போது தமிழில் ‘அன்பென்றாலே அம்மா’ என்கிற இசை வீடியோ ஆல்பத்தில் ஜரீனா வஹாப் அம்மாவாக நடித்திருக்கிறார்.
விக்ரமன் இயக்கத்தில் ‘நினைத்தது யாரோ’ படத்தில் கதாநாயகனாக நடித்த ரஞ்சித்மேனன் இந்த ஆல்பத்தை இயக்கி நடித்துள்ளார்.. கார், பங்களா, நகை, பணம் என்று எதுவுமே எந்த தாய்க்கும் சந்தோஷத்தை ஏற்படுத்தி விடாது. மகன், மகள்களின் அன்புக்கு இது எதுவுமே ஈடாகாது. என்கிற உயரிய கருத்தை இதில் சொல்லியிருக்கிறார்களாம். ஏழு நிமிடம் ஓடக்கூடிய இந்த இசை வீடியோ ஆல்பத்தில் நடித்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்று ஜரீனா வஹாப் கூறி உள்ளார். டைம்ஸ் மியூசிக் இன்று இந்த வீடியோ இசை ஆல்பத்தை வெளியிடுகிறது.