இயக்குனர் அறிவழகனிடம் உதவி இயக்குனராகவும், முண்டாசுப்பட்டி படத்தில் இணை இயக்குனராகவும் பணியாற்றிய மனோ கார்த்திக்கேயன் ஜாங்கோ’ என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
தமிழ் சினிமாவின் புதிய அத்தியாயங்களாக இன்று விளங்கும் பல இயக்குனர்களை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் சி.வி.குமார் தான், தனது திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக “இந்த புதிய படத்தை தயாரிக்கின்றார்.
சதிஷ் என்ற புதுமுகம் இப்படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கருணாகரன், ராம்தாஸ், RJ ரமேஷ், ஹரிஷ் பெராடி, துளிசி, சந்தான பாரதி, சிவாஜி, கஜராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.