“த்ரிஷா இல்லேன்னா டாப்ஸி” – இது ஜெய்யின் பாலிஸி..!

இன்றைய இளம் ஹீரோக்களில் பலருக்கும் நயன்தாரா மற்றும் த்ரிஷாவுடன் ஜோடியாக ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்கிற ஆசை இருக்கும். ‘ராஜாராணி’ படத்தில் நயன்தாராவுடன் ஜோடியாக நடித்த ஜெய்க்கு, அடுத்து அதிர்ஷ்ட தேவதை த்ரிஷாவுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பக்கத்தில் கொண்டு வந்து காட்டிவிட்டு, இப்போது பறித்துவிட்டாள்.

இயக்குனர் திரு இயக்கும் புதிய படத்தில் ஜெய்க்கு ஜோடியாக முதலில் த்ரிஷா நடிப்பதாகத்தான் இருந்தது. ஆனால் அவரது தேதிகள் சரிவர அமையாததால், தற்போது கதாநாயகியாக டாப்ஸி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்… சிட்டி சப்ஜெக்ட் என்றாலும், இதில் கும்பகோணத்தை சேர்ந்த கல்லூரி மாணவியாக நடிக்கிறார் டாப்ஸி. தமன் இசையமைக்கும் இந்தப்படத்தை, த்ரிஷாவின் வருங்கால கணவரான வருண்மணியன் தான், இன்னும் இரண்டு தயாரிப்பாளர்களுடன் இணைந்து தயாரிக்கிறார்.

ஜெய்டாப்ஸித்ரிஷா