அகில உலக சூப்பர்ஸ்டார் ஜாக்கிசான் இரண்டு தினங்களுக்கு முன் தான் நடித்த சைனீஸ் சோடியாக் படத்தை லண்டனில் திரையிட்டு காட்டியுள்ளார். அத்துடன் தான் கடந்து வந்த பாதையின் சில சுவராஸ்யமான தருணங்களையும் அங்கே வந்தவர்களிடம் பகிர்ந்துகொண்டார்.
“நான் நடித்த ‘ட்ரங்கன் மாஸ்டர்’ படத்தில் ‘குடி.. சண்டைபோடு.. குடி.. சண்டைபோடு’ன்னு சொன்னேன். ரசிகர்கள் ரசிச்சாங்க.. சிரிச்சாங்க.. ஆனா கொஞ்சம் காலம் கழிச்சு பார்த்தப்பதான் அடடா நாம் தப்பான மெசேஜ் சொல்லியிருக்கோமேன்னு ரொம்பவே வருத்தப்பட்டேன். அதனால் தான் அடுத்து எடுத்த ‘ட்ரங்கன் மாஸ்டர்’ பார்ட்-2வுல ‘குடிக்காதே.. சண்டை போடாதே’ன்னு என்று சொல்லவேண்டியிருந்தது. என் தவறை நானே திருத்திக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது. அதற்குப்பின் வந்த நாட்கள் என்னை படிப்படியாக திருத்தின” என்று மனம் திறந்து தனது தவறை ஒப்புக்கொண்டிருகிறார் ஜாக்கிசான்.
அதுதான் ஜாக்கிசான்..!