‘ஜாக்சன் துரை’ இயக்குனருக்கு கிடைத்த புதிய பாராட்டு.!

எஸ்.பி.முத்துராமன், கே.எஸ்.ரவிகுமார், சுந்தர்.சி ஆகியோருக்கெல்லாம் ஒரு ஒற்றுமை உண்டு.. அதாவது ‘இவர்கள் எல்லாம் தயாரிப்பாளர்களின் இயக்குனர்கள்’ என்கிற பாராட்டை பெற்றவர்கள். சொன்னால் சொன்ன நாட்களுக்குள் படத்தை முடித்து கொடுத்து தயாரிப்பாளரை காப்பாற்றும் வல்லமை படைத்தவர்கள். சமீபத்தில் கூட இயக்குனர் சுசீந்திரனுக்கு ‘தயாரிப்பாளர்களின் இயக்குனர்’ என்கிற பட்டம் வழங்கப்பட்டது..

இவர்கள் எல்லாம் பல படங்களை எடுத்த அனுபவசாலிகள். ஆனால் ‘பர்மா’ படம் மூலம் இயக்குனரான தரணிதரன் அந்தப்படத்தை 35 நாட்களில் எடுத்தார். அடுத்ததாக தற்போது சிபிராஜ் – சத்யராஜ் காம்பினேஷனில் உருவாகியுள்ள ‘ஜாக்சன் துரை’ படத்தையும் 35 நாட்களிலேயே சொன்னபடி எடுத்து ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார்.

அதுமட்டுமல்ல, இந்தப்படம் தற்போது போஸ்ட் புரொடக்சன் லெவலில் இருக்கும்போதே சாட்டிலைட் ரைட்ஸ் நல்ல விலைக்கு விற்றுள்ளது. அதனால் இரண்டாவது படம் வெளியாகும் முன்னரே தயாரிப்பாளர்களின் இயக்குனர் என்கிற பாராட்டுக்கு சொந்தக்காரர் ஆகிவிட்டார் தரணிதரன்.

கே.எஸ்.ரவிகுமார்சத்யராஜ்சிபிராஜ்சுந்தர்.சிஜாக்சன் துரைதரணிதரன்பர்மா