தப்பாட்டத்தை உற்சாகப்படுத்தும் ஜே.கே.ரித்தீஷ்..!

நாயகன் என்கிற படத்தில் நடித்ததன் மூலம் ஓவர் நைட்டில் பிரபல நடிகராக பலராலும் நன்கு அறியப்பட்டவர் முன்னாள் எம்.பி ஜே.கே.ரித்தீஷ். சினிமா தொடர்புகளை விட்டு கொஞ்ச நாள் ஒதுங்கி இருந்தவர், இப்போது மீண்டும் உள்ளே நுழைந்து, ‘தப்பாட்டம் எனும் படத்தை தயாரிக்கின்றார்

தப்படிக்கும் கலைஞனுக்கும், ஒப்பாரி வைக்கும் பெண்ணுக்கும் காதல் மலர்வதும், ஊரே மெச்சும் சிறந்த தம்பதியாக வாழ்வதும், பின்னர் இவர்களின் வாழ்க்கையில் எதிர்பாராவிதமாக ஒரு சம்பவத்தால் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க முடிந்ததா, மீண்டு வந்தார்களா என்பதுதான் கதை. ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து 1980களின் பிண்ணனியில் நடக்கும்படியாக கதை உருவாக்கப்பட்டுள்ளது..

இந்தப்படத்தின் இயக்குனர் முஜிபூர், பிரபல இயக்குனர்கள் மகேந்திரன் மற்றும் பிரியதர்ஷன் ஆகியோரிடன் பணியாற்றியவர். இதற்கு முன் ‘இரு நதிகள்’ என்னும் படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகனாக புதுமுகம் துரை சுதாகர் நடிக்கின்றார். இவர் நிலா புரோமோட்டர் நிறுவனத்தின் தலைவர். தப்பாட்ட கலைஞரான இந்த கதாபாத்திரத்திற்காக 40 நாட்கள் சிறப்பு பயிற்சியை மேற்கொண்டு நடித்துள்ளார். கதாநாயகியாக டோனா ரோசாரியோ நடித்துள்ளார்.

J K RitheeshThappattamஜே.கே.ரித்தீஷ்தப்பாட்டம்