இந்தப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக சுரபி என்பவர் நடித்துள்ளார். ‘எங்கேயும் எப்போதும்’, ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படங்களுக்கு இசையமைத்த சி.சத்யா தான் இந்தப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு எல்லோரும் பார்க்கும் வகையிலான ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இந்த மகிழ்ச்சியுடன் படத்தை வரும் டிசம்பர் 13ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். விக்ரம் பிரபு நடித்த முதல் படமான ‘கும்கி’ கடந்த வருடம் டிசம்பர்-14ல் வெளியானது. சரியாக ஒரு வருட முடிவில் இந்தப்படத்தை ரிலீஸ் செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.