நடிகர்களின் பெற்றோர் வெளியிட நடிகர்கள் பெற்றுக்கொண்ட இசை வெளியீடு..!

நடிகர் அபிசரவணன் – நடிகை காயத்ரி நடிப்பில் உருவாகியுள்ள ‘இவன் ஏடாகூடமானவன்’ படத்தின் பாடல் வெளியீடு சமீபத்தில் நடைபெற்றது. பொதுவாக அனைத்து இசை வெளியீடுகளும் தமிழ் சினிமாவின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பாடல்களை வெளியிடுவார்கள். ஆனால் இதில் சற்று மாறுபட்டு படத்தில் நடித்துள்ள நடிகர்களின் பெற்றோர்கள், பாடல்களை வெளியிட பிள்ளைகள் பெற்று கொண்டார்கள்.

அந்த வகையில் நடிகர் அபிசரவணன் பேசும் போது, எனது தந்தை ராஜேந்திரபாண்டியன், தாயார் பிரேமகலாவதி ஆகியோரால் இந்த படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் இந்த விழாவில், டெல்லி போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயி செல்வராஜ் என்பவருக்கு அவர் மீண்டும் விவசாயத்தில் இறங்க, உதவிசெய்யும் அவகையில் அவரது நிலத்தில் போர்வெல் கிணறு மூலம் தண்ணீர் எடுப்பதற்கு தேவையான நிதியுதவியை தானும் தனது நண்பர்கள் மூலமாகவும் சேர்ந்து திரட்டி வழங்கினார் அபிசரவணன்

Abi SaravananIvan edakudamanavanஅபிசரவணன்காயத்ரி