சூப்பர் ஸ்டாரின் ‘தளபதி’ சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி கண்ட ராஜமவுலியின் ‘பாகுபலி’, தற்போது திரையில் ஓடிக்கொண்டிருக்கும் மாதவன் நடித்த ‘இறுதி சுற்று’ போன்ற நூற்றுக்கணக்கான வெற்றிப்படங்களின் ஒலிநாடா உரிமையை வாங்கி இசையை வெளியிட்ட லகரி நிறுவனம் தான் இப்போது சிம்பு, நயன்தாரா நடித்துள்ள ‘இது நம்ம ஆளு’ படத்தின் ஆடியோ உரிமையையும் வாங்கியுள்ளது..
தமிழ், தெலுங்கு என இருமொழி ரைட்ஸுக்கும் சேர்த்து 1.5 கோடி ரூபாயை லகரி நிறுவனம் வழங்கியுள்ளதுதான் ஹைலைட்டான விஷயம்.. இத்தனைக்கும் படத்திற்கு இசையமைத்துள்ள குறளரசன் இந்தப்படத்தில் தான் இசையமைப்பாளராகவே அறிமுகமாகிறார்.
லகரி நிறுவனத்தினர் ஏ,ஆர்,ரஹ்மானின் முதல் படமான ‘ரோஜா’ படத்தின் ஒலி நாடா உரிமையை வாங்கினார்கள். அவர்கள் ராசி இன்று ஏ.ஆர்.ரஹ்மான் புகழின் உச்சியில் உள்ளார் என்றும் தற்போது குறளரசனின் முதல் படமான ‘இது நம்ம ஆளு’ படத்தின் இசையையும் அவர்கள் வாங்கி வெளியிடுவதன் மூலம் இவரும் நல்ல இடத்தை பிடிப்பார் என்றும் சிம்புவின் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் இருக்கின்றனராம்.