தற்போது அதர்வா, பிரியா ஆனந்த் நடிக்கும் ‘இரும்புக்குதிரை’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. யுவராஜ் போஸ் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.
மேலும் இந்தப்படத்தில் ஜானி ட்ரி நியூயன் (அதாங்க.. ஏழாம் அறிவு டாங்லீ) ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மிகமிக முக்கியமாக ராய் லட்சுமியும்(லட்சுமிராய்) பை வீராங்கனை அலிஷாவும் நடித்திருக்கிறார்கள்.. காரணம் பைக் சாகசம் செய்யும் இளைஞர்களைப் பற்றி ஒரு முழுநீள ஆக்ஷன் படமாக இது உருவாகிறதாம்.
இத்தாலியில் கிட்டத்தட்ட 20 நாட்கள் முகாமிட்டு ‘இரும்புக்குதிரை’ படக்குழுவினர் சில பாடல்களையும் ஒரு சில சண்டைக்காட்சிகளையும் படமாக்கியுள்ளார்கள். இதுதவிர பைக் சேசிங் காட்சிகளும் படமாக்கப்பட்டிருக்கின்றன. இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவை ஆகஸ்ட்-6ல் நடத்திவிட்டு படத்தை ஆகஸ்ட்-29ல் வெளியிட தீர்மானித்துள்ளார்களாம்.