‘இரும்பு குதிரை’யில் லட்சுமிராய் சவாரி உறுதி..!


‘ஒன்பதுல குரு’ படத்துக்குப் பிறகு கோடம்பாக்கத்தில் கொஞ்ச நாட்களாக நடிகை லட்சுமிராயை ஆளையே பார்க்கமுடியவில்லை.. லாரன்ஸின் முனி மூன்றாம் பாகமான ‘கங்கா’ படத்திலும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால், மலையாள சினிமாவில் முழுநேர நடிகையாகி விட்ட லட்சுமிராய், தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் தற்போது அவர் நடித்துக்கொண்டிருப்பது அதர்வா நடிக்கும்‘இரும்பு குதிரை’,மற்றும் சுந்தர்.சியின் ‘அரண்மனை’ என இரண்டு படங்களில்தான். இதில் இரும்பு குதிரை’ படத்திலிருந்து லட்சுமிராய் விலகிவிட்டார் என்ற செய்திகளும் சில நாட்களுக்கு முன் வெளியானது.

கிட்டத்தட்ட 60 சதவீத படப்பிடிப்பு அவர் இல்லாமலேயே முடிந்துவிட்ட நிலையில் தற்போது லட்சுமிராய் இந்தப்படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி மீண்டும் உறுதியாகியுள்ளது. இடையில் என்ன நடந்ததாம்..? இந்தப்பட்த்தில் இன்னொரு கதாநாயகியாக ப்ரியா ஆனந்த் நடித்தாலும் லட்சுமி ராக்கான கதாபாத்திரமும் முக்கியமானது தான்.

ஆனால் படப்பிடிப்பு நீண்டநாட்கள் நடைபெறும், அதனால் காலதாமதமாகும் என்பதால் தான் லட்சுமிராய் முதல் இந்தப்படத்தில் இருந்து வெளியேறினாராம். அதற்கேற்ற மாதிரி சமீபத்தில் தான் இத்தாலியில் கிட்டத்தட்ட 30 நாட்கள் நீண்ட்தொரு படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டு வந்திருக்கிறார்கள்.

இனிமேல்தான் லட்சுமிராய் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட இருக்கின்றன. அதுவும் வெறும் 12 நாட்கள் படப்பிடிப்புதானாம். இந்த இடைவெளியில் லட்சுமிராய்க்கு மாற்றாக வேறு ஒரு நடிகையை தேடிப்பார்த்தும் ஒருவரும் செட் ஆகவில்லை. இதனால் லட்சுமிராயையே மீண்டும் அணுக, அவரும் எந்தவித பிகுவும் பண்ணாமல் ஓகே சொல்லிவிட்டாராம்.. அதனால் ‘இரும்பு குதிரை’யில் லட்சுமிராயின் சவாரி நிச்சயம் உண்டு.

AdharvaAranmanaiAtharvaBalupuDhaam DhoomGangaIrumbhu KuthiraiKanchanaLakshmi RaiLawaranceOnbadula GuruPriya Anand