அனிருத், இமான் இசையமைக்கும் படங்களின் பாடல் வரிகளில் இருந்து லேட்டஸ்டாக ‘டைட்டிலை’ பிடித்து ட்ரெண்டியாக வைத்து இளைஞர்களை கவர்ந்து வரும் இந்த வேளையில், நடிகர் திலகம் சிவாஜி பாடிய ‘இரண்டு மனம் வேண்டும்’ என்கிற பாடல் வரியை தனது படத்தின் தலைப்பாக வைத்து ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார் அறிமுக இயக்குனர் பிரதீப் சுந்தர்.. முற்றிலும் புதுமுகங்கள் தான் இந்தப்படத்தில் நடிக்கிறார்கள்.
கன்னியாகுமரி கடலோர பகுதியில் மீனவர்களின் கதைக்களத்தில் தம்பியின் காதலும் பிரச்சனையும் அதனை அண்ணன் சமாளிக்கும் விதமும் என கதை பின்னப்பட்டிருக்கிரதாம். இதில் ஆச்சர்யமான விஷயம் இந்தப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதும் அஜய்குமார் ஒரு அட்வகேட்டாம்.. ஒருவேளை இது ஏதாவது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டிருக்குமோ என்னவோ..?